கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை


கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கடன் தொல்லை

பறக்கை அருகே காமச்சன் பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஆண்டனி கேலின்ஸ். இவருடைய மனைவி பிளாரன்ஸ். இவர்களுடைய மகன் சாஜி (வயது 27), தொழிலாளி.

பிளாரன்ஸ் குடும்பத்தை நடத்த கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிளாரன்ஸ் இறந்து விட்டார். இதனால் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் சாஜியிடம் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சாஜி மன வருத்தத்தில் இருந்ததாகவும், இதுபற்றி தந்தையிடம் கூறி புலம்பி வந்தார்.

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் சம்பவத்தன்று சாஜி காமச்சன் பரப்பு தெருவில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை 5 மணிக்கு சாஜி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பிரகாஷ் ஆண்டனி கேலின்ஸ் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story