கார் மோதி வாலிபர் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே கார் மோதி வாலிபர் இறந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே கடம்பை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடம்பை கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த சாரங்கபாணி என்பவரை கைது செய்தார்.
மேலும் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.