அரசு பஸ் மோதி வாலிபர் சாவு
போளூரில் அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை
போளூர்
போளூர் சாவடி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 23).
இவர் இன்று மதியம் அத்திமூரில் இருந்து போளூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து போளூர் வழியாக ஜமுனாமரத்தூர் செல்லும் அரசு பஸ் போளூர் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தது.
எதிரே வந்த விஜயகுமார் பஸ்சை முந்தி செல்ல முற்பட்டபோது நிலைதடுமாறி பஸ்சில் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போளூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story