ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
ஏரியில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
திருச்சி
புள்ளம்பாடி ஒன்றியம் தாப்பாய் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் பாஸ்கர் (வயது 29). இவர் கடந்த 8-ந்் தேதி காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் அந்த கிராமத்தில் உள்ள தெவிட்டான் ஏரியில் பிணமாக கிடந்தார். இதை கண்ட அங்குள்ள காளியம்மன்கோவில் பூசாரி ராமலிங்கம் பாஸ்கரின் தந்தை ரெங்கசாமியிடம் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பாஸ்கர் ஏரியில் குளிக்க சென்றபோது, தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story