ஊருணியில் மூழ்கி வாலிபர் சாவு
திருவாடானை அருகே ஊருணியில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மலையாண்டி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 26). கூலித் தொழிலாளி. இவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஓரிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஊருணியில் கார்த்திக் பிணமாக மிதந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் குடிபோதையில் ஊருணியில் மீன் பிடிக்க சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story