60 அடி உயர பாலத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி
தடுப்பு கட்டையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 60 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
உளுந்தூர்பேட்டை
வாலிபர்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் டி.வி.மெக்கானிக் வேலு. இவருடைய மகன் சூர்யா(வயது 20).
கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வந்த இவர் தனது கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றில் சொந்த வேலை காரணமாக உளுந்தூர்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
உளுந்தூர்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது சூர்யா ஒட்டி வந்த இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்டு 60 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.