மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா செல்லபெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் சிவராமன் (வயது 23). இவர், மோட்டார் சைக்கிளில் செல்லபெரும்புலிமேடு அங்காளம்மன் கோவில் அருகில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story