நாகா்கோவிலில்மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
நாகா்கோவிலில்மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19), மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நாகராஜா கோவில் முன் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார். நாகராஜா கோவில் திடல் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பெண் சாலையை கடக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத சதீஷ் உடனே பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சதீஷ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.