மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு
மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தார்.
திருச்சி
முசிறி ஜெயம்கொண்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருடைய மகன்கள் பூபதி (22), தீபன்குமார் (18). அண்ணன்-தம்பி இருவரும் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தங்கி பழனிவேல் என்ற என்ஜினீயரிடம் கடந்த ஒரு மாதமாக எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி அளவில் தீபன்குமார் டிரில்லிங் எந்திரத்தை எடுத்த போது, மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story