தேள் கடித்ததால் வாலிபர் சாவு?


தேள் கடித்ததால் வாலிபர் சாவு?
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேள் கடித்ததால் வாலிபர் சாவு?

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை சுமைதாங்கி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), தொழிலாளி. இவர் நேற்று காலை வைத்தியநாதபுரத்தில் இருந்து வட்டவிளை சானல்கரை ரோட்டில் சுமைதாங்கி அம்மன் கோவில் அருகில் சுடுகாட்டுக்கு போகும் பாதையில் மர்மமான முறையில் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். மேலும் கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பிணமாக கிடந்த சுரேஷ் உடலின் அருகில் தேள் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. அதே சமயத்தில் தேள் சுரேஷை கடித்ததற்கான அடையாளமும் சுரேஷ் உடலில் இருந்தது. இதனால் அவர் தேள் கடித்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் பிரேத பரிசோதனையில் தான் சுரேஷ் எப்படி இறந்தார்? என்ற முழு விவரம் தெரியவரும் என்றும் போலீசார் கூறினர்

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story