ஸ்கூட்டர் விபத்தில் வாலிபர் சாவு
ஸ்கூட்டர் விபத்தில் வாலிபர் சாவு
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி சேம்புவிளையை சேர்ந்தவர் ரெவி என்பவரது மகன் விபின் (வயது 20). தொழிலாளியான இவர் தினமும் ஸ்கூட்டரில் வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலையில் இவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார். பேரை பகுதியை சென்றடைந்த போது ஸ்கூட்டர் திடீரென விபினின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள ஒரு முந்திரி
ஆலையின் கேட்டில் ஸ்கூட்டர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விபின் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.