பாம்பு கடித்து வாலிபர் சாவு; இன்னொருவருக்கு தீவிர சிகிச்சை


பாம்பு கடித்து வாலிபர் சாவு; இன்னொருவருக்கு தீவிர சிகிச்சை
x

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடிக்க சென்ற போது பாம்பு கடித்து வாலிபர் பலியானார். மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடிக்க சென்ற போது பாம்பு கடித்து வாலிபர் பலியானார். மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டுக்குள் பாம்பு புகுந்தது

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் உச்சியாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜகுரு (வயது 33), தினா (22).இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் முல்லை நகரில் ஒரு வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்துவிட்டதாக கூறி ராஜகுரு, தினா ஆகிய 2 பேரையும் அழைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து ராஜகுரு, தினா ஆகிய 2 பேரும் அந்த வீட்டுக்குள் சென்று பாம்பு பிடிக்க முயன்றுள்ளனர்.

பாம்பு கடித்து வாலிபர் பலி

அப்போது 2 பேரையும் பாம்பு கடித்துள்ளது. அதையும் அறியாது பாம்பை அவர்கள் அடித்து கொன்றனர். பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

உடனேஅக்கம் பக்கத்தினர் 2 பேரையும் செத்த பாம்புடன் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தினா பரிதாபமாக இறந்தார். ராஜகுரு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story