வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை


வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
x

பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கருப்பூர்பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 26). இவர் கடந்த 2018-ம் ஆண்டு திருச்சுழி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் இந்த வழக்கை விசாரித்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அருணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார்.



Related Tags :
Next Story