கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை


கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை
x

கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர்

கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கஞ்சா வழக்கு

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அந்த வாலிபர் தஞ்சை மேலஅலங்கம் கோட்டைமேடுத் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கோபி என்கிற கோபிநாத் (வயது22) என்பது தெரியவந்தது. மேலும் அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. உடனே கோபியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

4 ஆண்டுகள் சிறை

பின்னர் கோபியை தஞ்சை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ரவி விசாரணை செய்து குற்றம்சாட்டப்பட்ட கோபிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் அபராதத் தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் என்.ரஞ்சித் ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story