கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x

கார் மோதி வாலிபர் பலியானார்

மதுரை

மேலூர்

மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டியை சேர்ந்தவர் பூமி (வயது 35). கூலி தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் மேலூருக்கு வந்துள்ளார். நாவினிப்பட்டியை அடுத்து நான்கு வழி சாலை பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த கார், பூமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து அதே இடத்தில் பூமி இறந்துபோனார். அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story