கார் கவிழ்ந்து வாலிபர் பலி
வேதாரண்யம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
கார் கவிழ்ந்தது
வேதாரண்யம் அருகே நாலுவேதபதியை சேர்ந்தவர் அரவிந்த்(வயது22). இவருடைய நண்பரான அதே ஊரை சேர்ந்்த கிருஷ்ணன்(31). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று திருத்துறைப்பூண்டிக்கு காரில் சென்று விட்டு வேதாரண்யம் வழியாக நாலுவேதபதிக்கு வந்து கொண்டிருந்தனர்.
காரை அரவிந்த் ஓட்டி சென்றார்.வேதாரண்யம் அருகே பழங்கள்ளிமேடு அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்தது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் அரவிந்த், கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து வேட்டைக்காரணிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.