மினிலாரி மோதி வாலிபர் பலி


மினிலாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே மினிலாரி மோதி வாலிபர் பலியானாா்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் நத்தமேட்டை சேர்ந்தவர் ராஜாராம் மகன் சந்தோஷ்(வயது 23). பெயிண்டர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டியை சேர்ந்த மனோஜ்குமார்(26) என்பவருடன் திருக்கனூருக்கு சென்றார். அங்கு பெயிண்டிங் வேலை முடிந்ததும் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். ராதாபுரம் அடுத்த வெட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது எதிரே வந்த மினிலாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். மனோஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான சந்தோசுக்கு ஜெயசுதா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story