சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கரூர்

சிறுமி பலாத்காரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள ஒரு சலூன்கடையில் வேலை பார்த்து வந்தவர் ஜெயராமன் (வயது 20). இவர் கடந்த 11-1-2021 அன்று அரவக்குறிச்சி பகுதியில் பிளஸ்-2 படித்து வந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஈரோட்டிற்கு கடத்தி சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமியை கடத்தி சென்றது மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமன் மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை முழுமையான முடிவடைந்த நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி நசீமா பானு நேற்று வழங்கினார்.

20 ஆண்டுகள் சிறை தண்டனை

இதில், சிறுமியை கடத்தி சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். ஏக காலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஜெயராமன் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதையடுத்து ஜெயராமன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story