நர்ஸ் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


நர்ஸ் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

நர்ஸ் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோா்ட்டு தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நர்ஸ் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோா்ட்டு தீர்ப்பு வழங்கியது.

முன் விரோதம்

ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோட்ச ராஜா (வயது 23). இவரது பெரியம்மா அந்தோணியம்மாள். இவரது மகள் தங்கம்மாள். இவர் வெம்பக்கோட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

தங்கம்மாளுக்கு, மோட்ச ராஜா மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 19.5.2013 அன்று மோட்ச ராஜா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

நர்ஸ் கொலை

உடனே தங்கம்மாள், அந்தோணியம்மாள் ஆகியோர் மோட்ச ராஜாவை மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அப்போது தனியார் பாலிடெக்னிக் அருகே மோட்டார் சைக்கிளை மோட்ச ராஜா நிறுத்துமாறு கூறியுள்ளார். பின்னர் அவர் தங்கம்மாள் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை நெரித்து அருகில் இருந்த கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து அந்தோணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்ச ராஜாவை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து மோட்ச ராஜாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story