போடிமெட்டு மலைப்பாதையில் ஜீப் மோதி வாலிபர் படுகாயம்
போடிமெட்டு மலைப்பாதையில் ஜீப் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
போடி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்த கர்ணன் மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 22). இவர் நேற்று தனது நண்பரான பத்ரகாளிபுரத்தை சேர்ந்த கருப்பசாமியுடன் (22) மோட்டார் சைக்கிளில் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். போடிமெட்டு மலைப்பாதையில் முதல் வளைவில் அவர்கள் வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
இதற்கிடையே எதிரே வந்த ஜீப் ஒன்று சாலையில் விழுந்த 2 பேர் மீது மோதியது. இதில், கருப்பசாமி படுகாயம் அடைந்தார். கோகுலகிருஷ்ணன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். பின்னர் அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.