பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர்


பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர்
x

குடியாத்தத்தில் பள்ளி மாணவியை காதலிக்க வலியுறுத்தி, ஆசிட் வீடுவதாக மிட்டிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

ஆசிட் வீசுவதாக மிரட்டல்

குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டையை சேர்ந்த 16 வயது மாணவி குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு, தற்போது பிளஸ்-2 செல்ல உள்ளார். அதேப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அப்போது இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன் என எழுதி கொடுத்ததால் அந்த வாலிபரை மன்னித்து அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் அந்த மாணவி குடியாத்தம் எம்.பி.எஸ்.நகர் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது அந்த வாலிபர் வழிமறித்து ஏன் என்னிடம் பேசமாட்டாய் என்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி, கையில் இருந்த செல்போனை கொடுத்து இதை வைத்துக் கொள் என மிரட்டி, வாங்கவில்லை என்றால் பாட்டில் போல் ஒன்றை காட்டி இதில் உள்ள ஆசிட்டை ஊற்றி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

போலீஸ் விசாரணை

இதில் பயந்து போன அந்த மாணவி செல்போனுடன் அழுது கொண்டே வீட்டில் உள்ள பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தி ஆசிட் வீசுவதாக மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story