11-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


11-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

குலசேகரம் அருகே 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மாணவி மாயம்

குலசேகரம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி கடந்த மாதம் 26-ந் தேதி அன்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது அவரை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவரை பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து மாணவியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

விசாரணையில், மாணவியை தக்கTeenager who kidnapped class 11 student arrested under POCSO Actலை பனவிளையை சேர்ந்த ஆகிஷ் செல்வன் (வயது 22) காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

உடனே போலீசார் சென்னைக்கு விரைந்து சென்றனர். அங்கு மாணவியுடன் ஆகிஷ் செல்வன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பின்னர் போலீசார் அந்த மாணவியை மீட்டு ஆகிஷ் செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை மாதம் குற்ற வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட ஆகிஷ் செல்வன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story