முதியவரிடம் 2 பவுன் நகையை மோசடி செய்த வாலிபர்கள்


முதியவரிடம் 2  பவுன் நகையை மோசடி செய்த வாலிபர்கள்
x

போலி தங்க பிஸ்கெட்டுகளை கொடுத்து முதியவரிடம் 2 பவுன் நகையை நூதன முறையில் மோசடி செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை



போலி தங்க பிஸ்கெட்டுகளை கொடுத்து முதியவரிடம் 2 பவுன் நகையை நூதன முறையில் மோசடி செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்

சென்னை-புரசைவாக்கம், சிவசண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் பக்ரி (வயது 80), சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புங்கம்பாடியில் உள்ள தனது பேத்தி ராஜராஜேஸ்வரியை பார்ப்பதற்காக ஆரணிக்கு வந்துள்ளார்.

புதிய பஸ் நிலையம் அருகே நடந்து சென்ற பக்ரியிடம், 3 வாலிபர்கள் 10 கிராம் எடை கொண்ட 6 தங்க பிஸ்ெகட்டுகள் இருப்பதாகவும், உடனடியாக வெளியூர் செல்ல வேண்டும், அதனால் ஏதேனும் ரூபாய் இருந்தால் கொடுத்துவிட்டு இதை பெற்றுக் கொள்ளவும் என கூறியுள்ளனர். அதற்கு பக்ரி தன்னிடம் பணம் ஏதுமில்லை எனக்கூறி அவர்களிடம் இருந்து சென்றுள்ளார்.

மோசடி

தொடர்ந்து முதியவரிடம் கழுத்தில் உள்ள நகையை கொடுத்துவிட்டு இந்த 60 கிராம் தங்க பிஸ்ெகட்டுகளை பெற்றுக்கொள் என கூறியுள்ளனர். உடனடியாக கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் நகையை கழற்றி கொடுத்துவிட்டு 60 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது பேத்தியின் கணவரான பிரசன்னகுமார் மூலம் இவை தங்கம் முலாம் பூசப்பட்ட போலி தங்க பிஸ்கெட்டு என தெரிந்ததும். உடனடியாக புதிய பஸ் நிலையம் அருகே சம்பந்தப்பட்ட நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என தேடிப் பார்த்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் நூதன முறையில் மோசடி செய்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story