அரசு பஸ் மோதி வாலிபர்கள் காயம்; டிரைவர் கைது


அரசு பஸ் மோதி வாலிபர்கள் காயம்; டிரைவர் கைது
x

நெல்லையில் அரசு பஸ் மோதி வாலிபர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் ஹாமீம்புரத்தை சேர்ந்தவர் அகமது மகன் ஷாஜீல் (வயது 20). இவர் தனது நண்பரான மேலப்பாளையம் வயல் தெருவை சேர்ந்த கமீல் இமானுலுதீன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் நெல்லை தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாலிபர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கமீல் இமானுலுதீன் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகைதீன் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவரான பாளையங்கோட்டை குலசேகரநாயனார் தெருவை சேர்ந்த கோதர் (43) என்பவரை கைது செய்தார்.


Next Story