கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு


கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்புச் சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்ெதாடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் ேகாவில் அஷ்ட பைரவர், சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவில், வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேலமறைக்காடர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story