தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்


தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 Feb 2023 7:00 PM GMT (Updated: 19 Feb 2023 7:00 PM GMT)

பழனி முருகன் கோவிலில் தெலுங்கனா கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவ்வப்போது வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், பழனியில் அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பழனிக்கு வந்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர், பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தமிழிசை சவுந்தரராஜனுடன், கணவர் சவுந்தரராஜன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே கோவிலுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனை பார்த்த பக்தர்கள் ஏராளமானோர் அவருடன் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.


Next Story