இருக்கூரில் நாளை சீதளா மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


இருக்கூரில் நாளை சீதளா மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

இருக்கூரில் நாளை சீதளா மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூரில் உள்ள செல்வவிநாயகர், பாலமுருகன் மற்றும் சீதளா மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் விநாயகர் வழிபாடு, புண்யாகம் மற்றும் கிராம சாந்தி நடந்தது. நேற்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை முளைப்பாரி அழைத்தல், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூமிபூஜை, யாக பூஜை மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு புண்யாகம், பூத சோதனம், பூர்ணாகுதியும், 11 மணிக்கு புதிய விக்கிரகங்களுக்கு கண் திறப்பும், இரவு 10 மணிக்கு எண் வகை மருந்து சாத்துடல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு யாக பூஜை, திரவ்யாகுதி நடக்கிறது. அதன்பிறகு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெறும். காலை 8.30 மணிக்கு சீதளா மகா மாரியம்மன் குறிஞ்சி விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து அனைத்து மூல மூர்த்திகளுகளுக்கும் மகா அபிஷேகம், தசதானம், தசதரிசனம் மற்றும் மகாதீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இருக்கூர் சீதளா மகா மாரியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story