சூரிய கிரகணத்தையொட்டி கோவில்களின் நடை சாத்தப்பட்டது


சூரிய கிரகணத்தையொட்டி கோவில்களின் நடை சாத்தப்பட்டது
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சூரிய கிரகணத்தையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது.

நடை சாத்தப்பட்டது

சூரிய கிரகணத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று நடை சாத்தப்பட்டது. அனைத்து கோவில்களிலும் நேற்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு கோவில்களில் நடை சாத்தப்பட்டது. பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு கோவில்களின் நடை திறக்கப்பட்டு தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், வரமஹாலட்சுமி உடனாகிய பரவாச தேவபெருமாள் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில் மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் ஆகியவற்றில் நடை நேற்று மதியம் 2 மணிக்கு சாத்தப்பட்டது.

பின்னர் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவில், அபய ஆஞ்சநேய சாமி கோவில், சுப்பிரமணியசாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களின் நடை சாத்தப்பட்டது.

காலபைரவர் கோவில்

அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில், சென்றாய பெருமாள் சாமி கோவில், வே.முத்தம்பட்டி வீரஆஞ்சநேய சாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், மூக்கனூர் அக்கமணஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவில், அதகப்பாடி லட்சுமி நாராயணசாமி கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று மதியம் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டன. தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.


Next Story