கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் ஊராட்சி மேல்சோமார்பேட்டையில் உள்ள ராஜகணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, முதல் கால யாக பூஜை, கங்கை பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டிஹோமம், சுதர்சனஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. நேற்று 2-ம் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு ராஜ கணபதி கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story