பர்கூரில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா


பர்கூரில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் சிங்கார மாநகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி விநாயகருக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் காமாட்சி அம்மன் கோவில், தர்மராஜா கோவிலில் மாவிளக்கு எடுத்து சென்று, பொங்கல் வைத்தனர். நேற்று மகா மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story