பாலக்கோடு புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா-பந்தக்கால் நடுதலுடன் தொடங்கியது
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி தினத்தன்று நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நடப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர், தர்மகர்த்தா, ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story