கோவில்பட்டிபுனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கூட்டு திருப்பலி


தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:45 PM GMT)

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கூட்டு திருப்பலி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் உள்ள கலையரங்கில் கிறிஸ்மஸ் விழா நேற்று முன்தினம் இரவு மணிக்கு தொடங்கியது. கூட்டு திருப்பலி, ஆராதனை, பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமை தாங்கினார்.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ், ஆந்திரா பங்குத்தந்தை குமார், கருமாத்தூர் பங்குத்தந்தை ஜோனா, உதவி பங்கு தந்தை மிக்கேல் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுத்திருப்பலி, ஆராதனை நடத்தினா். விழாவில் கிறிஸ்தவ பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.

அதிகாலை 2 மணி வரை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இறை மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் கேக், இனிப்பு வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.


Next Story