சேலம் தாதகாப்பட்டி கேட்டில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு


சேலம் தாதகாப்பட்டி கேட்டில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
x

சேலம் தாதகாப்பட்டி கேட்டில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி கேட் வேலு நகர் பகுதியில் தேவி புத்து கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கனகராஜன் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவில் நடையை சாத்தி விட்டு கனகராஜன் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல கோவிலை திறக்க அவர் வந்தார். அப்போது அங்கு கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்த போது சாமி சிலை பிரகாரம் அருகில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு கோவில் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதில் சுமார் ரூ.15 ஆயிரம் திருட்டு போய் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் திருடர்கள் அங்கிருந்த நகைகளை திருடி சென்றார்களா? என்பது குறித்த‌ விவரம் எதுவும் தெரியவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கோவிலில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story