கோவில் உண்டியல் பணம் திருட்டு


கோவில் உண்டியல் பணம் திருட்டு
x

கோவில் உண்டியல் பணம் திருட்டு போனது

தஞ்சாவூர்

பாபநாசம்

பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மணல்மேடு கிராமம், மேலத்தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புறமுள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை பெயர்த்து எடுத்து வயல் பகுதிகளுக்கு தூக்கி சென்று உண்டியலின் பூட்டை உடைக்காமல், காணிக்கை செலுத்தும் பகுதி வழியாக பணம் மட்டும் சில்லரை காசுகளை திருடி விட்டு உண்டியலை தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story