அன்னதான கூடம் திறப்பு விழா
மகா மாரியம்மன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு விழா நடந்தது
திருவாரூர்
வலங்கைமான்;
வலங்கைமானில் பிரசித்தி பெற்ற பாடைக்கட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் அன்னதான கூடம் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது. எனவே புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. புதிய அன்னதான கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி கோவில் மேலாளர் சீனிவாசன் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story