வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம்


வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 6 July 2023 3:23 AM IST (Updated: 6 July 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி அருகே ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பேராவூரணி;

பேராவூரணி நகர், ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில், தேரோட்டம் நேற்று நடைபெற்றது.விழா தொடக்கத்தில் காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று மது எடுத்தல், தேர் திருவிழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.விழாவில் களத்தூர், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் துணை ஆணையர் சூரியன் நாராயணன் அறிவுறுத்தலின்படி, திருக்கோவில் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story