சாரங்கபாணி கோவில் தேரோட்ட ஆலோசனை கூட்டம்


சாரங்கபாணி கோவில் தேரோட்ட ஆலோசனை கூட்டம்
x

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் நடைபெற உள்ள சித்திரை திருவிழா தேரோட்டத்தை பாதுகாப்பான முறையில் நடத்தி முடிப்பது குறித்த அனைத்து துறை அதிகாரிகள் தேர் கட்டுமான பணியாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் அழகேசன், மருத்துவ நிலைய அலுவலர் பிரபாகரன், மற்றும் அதிகாரிகள் தேர் கட்டுமான பணியாளர்கள் ் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சித்திரை தேரோட்டத்தை அசம்பாவிதங்கள் இன்றி பாதுகாப்பான முறையில் நடத்தி முடிப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், தேர் புறப்பட்டு மீண்டும் தேர் நிலையை அடையும் வரை எந்தவித இடையூறும் ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் நடத்தி முடிப்பது மற்றும் தேரோட்டத்தை காண வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.


Next Story