அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு


அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகே ஜாம்புவானோடை கொல்லைக்காடு புதுத்தோப்பு பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு முன்னோடியார், அக்னிவீரன், பெரியாச்சி அம்மன் சன்னதிகள் உள்ளன. இங்கு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது அதன்படி திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். யாக சாலை பூஜையின் முடிவில் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் காலை 10.15 மணிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. அப்போது கருடன் வட்டம்மிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சரண கோஷங்கள் எழுப்பப்பட்டன. குடமுழுக்கு விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி சுகாதார பணிகளுக்கானஏற்பாடுகளை ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முத்துப்பேட்டை போலீசார் செய்திருந்தனர். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story