கோவில் கொடை விழா
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
தென்காசி
அச்சன்புதூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடை விழா கடந்த 27-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதிஹோமம், வருசாபிஷேகம், குடியழைப்பு, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, வில்லிசை, நள்ளிரவு பூஜை நடந்தது.
தொடர்ந்து பெரியநாயகம் கோவில் மற்றும் குற்றாலம் தீர்த்தம் எடுத்து வர புறப்படுதல், வாணவேடிக்கை, முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
விழாவில் கிருஷ்ணாபுரம், கடையநல்லூர், மேலக்கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story