கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x

கோவில் கொடை விழா நடைபெற்றது

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு கடந்த 5-ந் தேதி திருவிளக்கு பூஜை, சுவாமிக்கு மாகாப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை, முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடியழைப்பு, சாஸ்தா பிறப்பு, கும்பம் ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று சிவனணைந்த பெருமாள் பூஜை, தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் நேர்ச்சையாக பால்குடம் எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு மதிய கொடை, மாலை 6 மணிக்கு கோவில் கிரகம் ஊர் சுற்றிவருதல், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடந்தது. ஏற்பாடுகளை முக்கூடல் விஸ்வகர்ம சமுதாய விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story