கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி


கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி முத்தாரம்மன், சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி முத்தாரம்மன், சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா வருகிற 30, 31-ந்தேதிகளில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கால்நாட்டு வைபவம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் பலர் பங்கேற்றனர்.


Next Story