வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கோவிலில் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார். வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வேதநாயகிஅம்மனுக்கு ஆடிப்பூர விழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, கோவில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story