பொன்னியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா


பொன்னியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
x

பொன்னியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு உலக நன்மை மற்றும் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கிராம பெண்கள் தங்கள் இல்லங்களில் இருந்து முளைபாரியினை சுமந்து வந்து பொன்னியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து முளைபாரியினை தங்கள் தலைமேல் சுமந்து வந்த பெண்கள் காரிக்கோட்டை ஏரியில் விட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வரும் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மன் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


Next Story