திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை காடம்பாடி, பச்சை பிள்ளையார், வடகரையில் உள்ள திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல், வில்வளைப்பு, திருக்கல்யாணம், அரவான் களப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மாலை திரவுபதை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story