காளியம்மன் கோவிலில் தயிர் பள்ளய உற்சவம்
காளியம்மன் கோவிலில் தயிர் பள்ளய உற்சவம் நடந்தது.
திருவாரூர்
நன்னிலம் தாலுகா வடகுடியில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத செவ்வாய்க்கிழமை அன்று தயிர் பள்ளய உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் உற்சவம் நடந்தது. முன்னதாக மகா காளியம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் முன்பு 100 கிலோ பச்சரிசி சாதத்தில் காய்கறிகளுடன் தயிர்பள்ளயம் அமைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனபால், மகாலிங்கம் சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story