விருத்தபுரீஸ்வரர் கோவிலில் விஜயதசமி வழிபாடு


விருத்தபுரீஸ்வரர் கோவிலில் விஜயதசமி வழிபாடு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தபுரீஸ்வரர் கோவிலில் விஜயதசமி வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் மணக்கரையில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக நவராத்திரி கொலு முன்பாக பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story