சந்தானராமர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா


சந்தானராமர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
x
தினத்தந்தி 28 Oct 2022 1:00 AM IST (Updated: 28 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சந்தானராமர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.

திருவாரூர்

தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் கி.பி.1761-ம் ஆண்டு நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவில் கட்டப்பட்டது. மன்னர் தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் அருளியதால் இக்கோவில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதரால் பாடல்பெற்ற கோவிலான இங்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தன. நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், சந்தானராமசாமி கைங்கர்ய சபையினர் செய்து இருந்தனர்.


Next Story