சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்


சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
x

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிநாதசுவாமி கோவில்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 24-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 25-ந் தேதி சந்திரசேகரர், வள்ளி, தெய்வானை, வீரகேசரி, வீரபாகுவுடன் சண்முகர் மலைக்கோவிலில் இருந்து படியிறங்கி உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளினார்.

திருக்கல்யாணம்

இதைத்தொடர்ந்து தினமும் இரு வேளை சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 30-ந் தேதி நடந்தது. அன்று சண்முகருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய சண்முகர் அம்மனிடம் சக்திவேல் வாங்கி கஜமுக சூரன், சிங்கமுக சூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்தார்.

விழாவில் நேற்று முன்தினம் சண்முகர் காவிரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி்யும் தெய்வானை திருக்கல்யாணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சாமி ஊஞ்சலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவிலில் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சண்முகார்ச்சனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

ஆதிகும்பேஸ்வரர் கோவில்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக சுப்பிரமணியர்- தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இதனைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story