வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் வேதங்கள் பூஜித்த தலமாகும். இங்கு மாசி மக உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு ரிக், யஜுர், சாம வேத பாராயணம் நிகழ்ச்சிகள் தொடங்கியது. முரளிதர சுவாமிகளின் சார்பில் சிவ ஆகம வேத விற்பன்னர்களான புருஷோத்தமன், பிரபு கனபாடிகள் தலைமையிலான குழுவினர் வேத பாராயணத்தை தொடங்கினர். வருகிற 24-ந் தேதி வரை கோவிலில் மணவாள சுவாமி சன்னதி எதிரில் ரிக், வேத பாராயணமும், 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி வரை யஜூர் வேத பாராயணமும், 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சாம வேத பாராயணமும் நடக்கிறது.


Next Story