கிழக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு விழா
கிழக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு விழா நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை நீலா தெற்கு வீதியில் கிழக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ ஆராட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வருகிற 4-ந் தேதி வரை தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் மணிகண்டன் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி சட்டநாதர் தீர்த்தத்தில் ஆராட்டு உற்சவம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story